ஜப்பானின் யுனிவேர்சல் சோட்டோக்கான் கராத்தே தலையகத்தில் இடம்பெற்ற பயிற்சிகள் மற்றும் தேர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்டநசனல் ஸ்ரீலங்காவின் மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.

சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்டநசனல் ஸ்ரீலங்கா வின் பிரதம பயிற்றுனரும், கராத்தே ஒப் ஜப்பான் பெடரெசன் இன்ரநசனல் அமைப்பின் வெளிநாட்டு விவகார பணிப்பாளருமான சிகான்.அன்ரோ டினேஸ் மற்றும் அவரது மாணவர்கள் ஜப்பானின் யுனிவேர்சல் சோட்டோக்கான் கராத்தே தலையகத்தில் நடைபெற்ற பயிற்சிகள் மற்றும் தேர்விலும் பங்கெடுத்து சித்தியடைந்துள்ளனர்.

சியாம்குமார் அகிலேஸ், பிரகாஸ் றுகேஸ், விஜயகுமார் சஸ்றிக் ஆகிய மாணவர்கள் 1ஆம் கறுப்புப்பட்டி டிப்ளோமா தரத்திற்கு சித்தியடைந்துள்ளனர்.