நாடாளவீய ரீதியில் காணப்படும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு அடுத்த வருடத்திற்குள் 30 நீர் வழங்கல் திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி புரம் கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

அரசாங்கத்தின் அனுசரணையுடன் தோட்டப்புற மக்களுக்கு 30 நீர் வழங்கல் திட்டத்தை உருவாக்கியுள்ளதுடன் அடுத்த வருடத்திற்குள் நாடு முழுவதும் உள்ள தோட்டங்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

அதேவேளையில் இத்திட்டத்தின் மூலம் பதுளை மாவட்டத்தில் 5 தோட்டப்பகுதிகளில் குடிநீர் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நுவரெலியா மாவட்டத்திலும் இத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றார்.