வெலிகட சிறைச்சாலையில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் 10 பெண் கைதிகள் தமக்கான வழக்கு விசாரணையானது இழுத்தடிக்கப்பட்டு தாமதமடைந்து வருவதன் காரணமாக தாங்கள் தொடர்ந்தும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆகையினால் தமக்கான வழக்கினை துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரியே மேற்கண்ட போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.