நாடுபூராகவும் திடீரென மின் தடை ஏற்பட்டமைக்கான காரணத்தை ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கரமசிங்கவினால் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நான்கு வாரங்களுக்குள் குறித்த குழுவினர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 25ம் திகதி (25.02.2016) நாடுபூராகவும் திடீரென மின் தடை எற்பட்டமை குறிப்பிடத்தக்கது.