முல்லைத்தீவு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் தொழில் தருணர் ஒருவரால் கட்டப்பட்ட முல்லை பால் பதனிடும் தொழிற்சாலை திறப்பு நிகழ்வு தொழிற்சாலையின் நிறுவுனர் சி.தவசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்தோடு சிறப்பு விருந்தினர்களாக வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந்த முல்லை வலயக் கல்விப்பணிப்பாளர் உமாநிதி புவனராஜா வவுனியா கால்நடை சங்க தலைவர் கந்தசாமி உதவி தொழில் அபிவிருத்தி உத்தியேகத்தர் செ.றஜனிகாந் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் முல்லை பால் பதனிடும் தொழிற்சாலையின் பெயர்பலகையினை முல்லை வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் திரைநீக்கம் செய்து வைக்க விற்னை நிலையத்தினை வடமாகாண முதலமைச்சர் திறந்துவைத்துள்ளார்.

தொடர்ந்து பால் பதனிடும் தொழிற்சாலையினை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் திறந்துவைத்துள்ளார்.

தொடர்ந்து அங்குள்ள இயந்திரங்களை வடமாகாண முதல்வர்,தமிழரசு கட்சியின் தலைவர்,முல்லைவயலய கல்விப்பணிப்பாளர் மற்றும் வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் ஆகியோர் இயக்கிவைத்துள்ளார்கள்.

நிகழ்வில் முதன்மை உரையினை வடமாகாண முதலமைச்சர் நிகழ்த்தியுள்ளார்