(நா.தினுஷா) 

தேசிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி பணிகள், நீதித்துறையின் புதிய கட்டமைப்பு  விஸ்த்தரிப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய வர்த்தக ஒப்பந்தங்களினூடாக நாட்டுக்கு  கிடைக்கப் பெறும் சாதகமான பிரதிபலன்களை தொடர்ந்து  பெற்றுக் கொள்ள முடியும் என  மின்வலு மற்றும் புதிப்பிக்கத்தக்க சக்திவளங்கள பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

தேசிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதியடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றது. இடைப்பட்ட காலக்கட்டத்தின் அரசாங்கத்தின் வகிபாகம் பற்றி குறிப்பிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டரசாங்கத்தில் இரண்டு பிரதான கட்சியின்  தலைவர்களும் ஒன்றினைந்தே அரசாங்கத்தினை  சர்வதேச ரீதியில் முன்னெடுத்து செல்கின்றனர். அரசியல் ரீதியில் இரண்டு தலைவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும்.  2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தை உருவாக்கிய நோக்கத்தின் கொள்கையின் பிரகாரம் இணைந்தே செயற்படுகின்றனர். ஒருமித்த கொள்கையுடன்  கூட்டரசாங்கம் செயற்பட்டமையின் காரணமாகவே  பல எட்டமுடியாத இலக்குகளை அடைய முடிந்துள்ளது.

தேசிய அரசாங்கம் கடந்து வந்துள்ள இந்த மூன்று வருடங்களில் பல பிரச்சினைகளை சந்தித்திருந்தாலும் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு ஜனநாயகம் மிக்க நாடாக மாற்றியமைக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும்  பல்வேறு திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வழங்கிய ஜனநாயக கொள்கைகளுக்கு அமையவாகவே அனைத்து நடவடிக்கைகளும் இதுரை காலமும்  முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.