"சீனாவின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அவசியம் எமக்கில்லை"

Published By: Vishnu

12 Aug, 2018 | 05:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மக்களின் ஆதரவு தற்போது முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் உள்ளமையினால் சீனாவின் ஆதரவை கொண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவற்கான அவசியம் எமக்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆட்சி மாற்றத்தை  ஏற்படுத்த 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமெரிக்காவை நாடியதை போன்று  நாங்கள் கடந்த வாரம் பொது எதிரணியினர்  ஆரம்பித்த அரசை கவிழ்க்கும் போராட்டத்திற்கு சீனாவை நாடவில்லை. சீனா எமது நாட்டு உள்ளக அரசியல் விவகாரங்களில் தலையிடவில்லை சீனாவின் ஆதரவை கொண்டுதான் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டிய அவசியம் எமக்கு இல்லை ஏனெனில் மக்கள் ஆதரவு  தற்போது மஹிந்த பக்கமே.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க புகையிரத தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வந்த போராட்டத்தின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ ,  நாமல் ராஜபக்ஷ ,  பஷில் ராஜபக்ஸ ஆகியோரே காணப்படுகின்றனர் என்று  குறிப்பிட்டுள்ளமை அரசாங்கத்தின் இயலாமையினை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த விடயத்திற்கும்  மஹிந்தவின் குடும்பத்திற்கும் தொடர்பு உண்டு என்ற விடயத்தை இவரால் ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியுமா,  பொய்யான கருத்துக்கனை குறிப்பட்டு மக்களை  சொற்ப நேரத்திற்கு அரசியல் ரீதியில் திசைத்திருப்பி விட இதுவொன்றும் மூன்று மணித்தியால திரைப்படமல்ல என்ற விடயத்தை இவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21