ஹெரோயின் போதைப்பொருளை வயிற்றுக்குள் விழுங்கியவாறு இலங்கை வந்த பாகிஸ்தான் பிரஜையொருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரின் வயிற்றுக்குள் இருந்து 450 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் விமானநிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.