இலங்கை இந்தியா உட்பட பல நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு அதிகளவு நிதியை ஒதுக்கும் சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திடவுள்ளார் என சீனாவை தளமாக கொண்ட சிஜிடிஎன் தெரிவித்துள்ளது

இது தொடர்பில் சிஜடிஎன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

2019 ம் ஆண்டிற்கு பாதுகாப்பு செலவீனமாக 700 பில்லியன் டொலர்களை ஒதுக்கும் பாதுகாப்பு சட்டமூலத்தில் திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி கைச்சாத்திடவுள்ளார்.

சனப்பிரதிநிதிகள் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்க செனட் 716 அமெரிக்கன் பில்லியன் டொலர்களை ஒதுக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றியது.

இதன் மூலம் மேலும் வலுவான அமெரிக்க இராணுவம் அவசியம் என்ற டிரம்பின் கோரிக்கைக்கு செனெட் ஆதரவு வழங்கியுள்ளது.

குறிப்பிட்ட கொள்கை சட்டம் அமெரிக்க கடற்படைக்கு மேலும் ஒரு விமானந்தாங்கி கப்பலை வழங்குவதற்கு வழங்கும் யோசனையை கொண்டுள்ளது.

அடுத்த ஐந்து வருடங்களில் அமெரிக்க கடற்படைக்கு மேலும் 45 கப்பல்களை வழங்கும் திட்டமும் காணப்படுகின்றது.

அமெரிக்க வரலாற்றில் பென்டகனிற்கு ஒதுக்கப்பட்ட மிகப்பெரும் தொகைஇதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அமெரிக்க செனெட் எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை.மேலும் வழமைக்கு மாறாக அமெரிக்க காங்கிரஸ் இம்முறை மிக வேகமாக இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

சீனாவினால் ஏற்படக்கூடிய அச்சமே இந்த நடவடிக்கைகளிற்கு காரணமாக உள்ளது.

அமெரிக்க படையினர் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைககளை குறைத்துக்கொண்டு ஏசிய பசுவிக்கில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

அமெரிக்க பாதுகாப்பு சட்டம் இலங்கை இந்தியா போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு உறவை மேலும் அதிகரிப்பதற்காக அதிகளவு நிதிகளை வழங்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

வியட்நாம் யுத்தத்தின் பின்னர் இந்த வருடமே முதல்தடவையாக  அமெரிக்க யுத்த கப்பல்கள் வியட்நாம் சென்றுள்ளன.

இந்தோ பசுபிக்கில் அமெரிக்கா தனது கடற்படை விமானப்படை வலிமை மேலும் அதிகரித்து வருகின்றது என சர்வதேச பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான திமோதி ஹெத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறிப்பிட்ட சட்டமூலம் சீனாவை மாத்திரமன்றி ரஸ்யாவையும் இலக்குவைக்கின்றது

குறிப்பிட்ட சட்டமூலம் 77 எவ்35 தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்வதற்கும் குறிப்பிட்ட சட்டமூலம் அனுமதியளிக்கின்றது.

இதேவேளை நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கிக்கு நவீன விமானங்களை வழங்குவதை இது தடை செய்கின்றது.