ஈராக் நாட்டின் பைஜி மாவட்டத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடி மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 

ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தங்கள் ஆதிக்கத்தை முன்னிறுத்த முயன்று வருகிறது. ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி இருந்தனர். பின்னர் அரசுப்படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பினர் அங்கிருந்து விரட்டப்பட்டு அப்பகுதி மீண்டும் அரசின்வசம் வந்தது.

இதையடுத்து, அவ்வப்போது மக்கள் கூடும் இடங்களிலும், தங்களுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்துவதுமாய் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஆல்பு ஜுவாரி என்ற கிராமத்தில் அமைந்துள்ள சோதனை சாவடி ஒன்றின் மீது  ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அல் ஷாபி எனும் பயங்கரவாதத்துக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்தவரகள் என்பது குறிப்பிடத்தக்கது.