சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து புகையிரத தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன. இந்த பேச்சுவார்த்தையினையடுத்தே புகையிரத தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை கைவிட தீர்மானித்துள்ளதாக புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் சங்கத்தின் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். 

அங்கீகரிக்கப்பட்ட சம்பள உயர்வினை வழங்குமாறு அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் சரத் அமுனுகம ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.