டெங்கு நோய் பரவுவதை ஓரிருவரால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. முழு சமூகமும் இணைந்து ஒத்துழைத்தால் மாத்திரம் டெங்கு நோயினை முழுமையாக கட்டுப்படுத்துதால் சாத்தியாகும் என மத்திய மாகாண முலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். 

கண்டி எசல பெரஹரா தொடர்பாக சுற்றாடல் வேலைத்திட்டம் தொடர்பாக கண்டி மாநகர அதிகாரிகளை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆங்காங்கே போடப்படும் குப்பை கூலங்கள் தொடர்பாக மக்களை தெளிவு படுத்துவது, வீதி நாடகங்களை நடத்துதல், சுவரொட்டிகளை காட்சிப் படுத்துதல், சிரமதானங்களை மேற்கொள்ளுதல் என்பவற்றினால் மாத்திரம் டெங்கு நோயினை கட்டுப் படுத்த முடியாது. அனைத்து சமூகமும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

எனவே கண்டியில் பெரஹரா பார்வையிட வரும் அனைவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பது வழங்குவது புத்த பெருமானுக்கு செய்யும் பாரிய நற்கருமங்களில் ஒன்றாக முடியும் என்றார்.