நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில், “சுவா­சித்து மூன்று ஆண்­டுகள்” என்ற தொனிப்­பொ­ருளில் பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்த அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்கும் செயற்­பா­டுகள் இன்று முதல் எதிர்­வரும் 21 ஆம் திகதி வரையில் நடை­பெ­ற­வுள்­ளன.

இந்த அபி­வி­ருத்­திப்­ப­ணி­களின் முதற்­கட்­ட­மாக இன்று நுவ­ரெ­லியா மாவட்­டத்­தி­லுள்ள பூண்­டு­லோயா, டன்­சினன் தோட்­டங்­களில் சொந்த வீடுகள் இன்றிக் கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் வாழும் பொது­மக்­க­ளுக்கு பிர­த­மரின் தலை­மையில் 404 வீடுகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. இத­னை­ய­டுத்து எதிர்­வரும் 17 ஆம் திகதி மொன­ரா­கலை, தெவி­புத்­கமை கிரா­மத்தில் 52 வீடு­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொது மக்­க­ளிடம் கைய­ளித்து வைப்பார்.

15,500 மில்­லியன் ரூபா செலவில் குரு­ணா­க­லையில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர் மற்றும் சுகா­தார சேவைகள் உள்­ள­டங்­க­லான வேலைத்­திட்­டத்தை நாளை 13ஆம் திகதி பிர­தமர் திறந்­து­வைப்பார். இதே­வேளை, அவரின் தலை­மையின் கீழ் நாளை மறு­தினம் 14 ஆம் திகதி அநு­ரா­த­புரம் மஹா­வி­கா­ரையின் அபி­வி­ருத்திப் பணிகள் ஆரம்­பித்­து­வைக்­கப்­படும் அதே­வேளை அங்கு நினை­வுத்­தூபி மற்றும் குளமும் திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்­த­நி­லையில், காணி உரிமை இல்­லாத பொது­மக்­க­ளுக்கு காணியின் உரி­மையை வழங்கும் நிகழ்வு எதிர்­வரும் 16 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை இரத்­தி­ன­பு­ரியில் இடம்­பெ­ற­வுள்­ளது. இரத்­தி­ன­புரி நக­ர­சபை மைதா­னத்தில் இடம்­பெறும் இந்த வைப­வத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையின் கீழ் 2000 காணி உரி­மைகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

இரத்­தி­ன­பு­ரியைத் தொடர்ந்து 18ஆம் திகதி தெனி­யாய, பஸ்­கொடை பிர­தேச செய­லாளர் காரி­யா­ல­யத்தில் வைத்து 1000 காணி உரி­மை­களும், 19ஆம் திகதி கேகா­லையில் 2500 காணி உரி­மை­களும், எதிர்­வரும் 21 ஆம் திகதி பத்­தே­க­மையில் 4000 காணி உரிமைகளும் பிரதமரினால் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை 4130 பட்ட தாரிகளுக்கான அரச தொழில் நியமனங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி அரலி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப் படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.