அணியின் விதிமுறைகளை மீறியதற்காக தடைகளை அனுபவித்துவரும் தனுஸ்க குணதிலகவும் ஜெவ்ரி வன்டர்சேயும் மீண்டும் அணியில் இடம்பெறுவார்கள் என  இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க மீண்டும் தெரிவித்துள்ளார்

இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றமை குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன், என தனுஸ்க குணதில ஜெவ்ரி வன்டர்சேயின் விவகாரம் குறித்து ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இது கடந்த காலங்களிலும் இடம்பெற்றது,எங்கள் கலாச்சாரம் வித்தியாசமானது, எங்களால் இதனை சகித்துக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் ஒரு இரு நபர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை முழு அணிக்கும் குடும்பத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மனிதர்கள் தவறிழைப்பது வழமை அவர்களிற்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்கவேண்டும்,அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை அவர்களின் அணியின் விதிமுறைகளையே மீறியுள்ளனர் அவர்கள் மீண்டும் வருவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.