ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுகளுக்கு உற்படுத்தப்பட்டுவந்தமை குறித்து அம்மூன்று சகோதரிகளது சிறிய தந்தை எத்திமலை பொலிசாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இம் மூன்று சகோதரிகளும் சிறு பிள்ளைகளாக இருந்த போதிருந்தே கடந்த 2012 ஆம் ஆண்டு முதல்  தொடர்ச்சியாக இச்சகோதரிகள் மீது பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இச்சகோதரிகளுக்கு 16, 14, 9 வயதுகளாகின்றன.

இப்பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்து எத்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலந்த புலத்சிங்களவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் ஊடாக குறிப்பிட்ட மூன்று சகோதரிகள் விசாரணைக்குற்படுத்தப்பட்டனர். 

அவ் விசாரணையின் போது பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்றமை தெரிய வந்துள்ளது. இச் சகோதரிகள் வைத்திய சிகிச்சைகளுக்குற்பட்டிருந்த வேளையில் சிறுவயது முதலிருந்தே இச்சகோதரிகள் பாலியல்  ல்லுறவிற்குற்படுத்தப்பட்டமை ஊர்ஜிதமாகியுள்ளது.

இதையடுத்து மூன்று சகோதரிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் சிறிய தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அநேகமாக 13 ஆம் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படுவரென்று எத்திமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.