மேல் மாகாண சபைக்கு தலா 6 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 125 கதிரைகள் கொள்வனவு செய்யும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துமாறு மேல் மாகாண ஆளுநர் இசுரு தேவப்பிரிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

மேல் மாகாண சபையின் புதிய கட்டடப் பகுதியின் சமய மண்டபத்துக்காக தலா 6 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 125 கதிரைகளை கொள்வனவு செய்வதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தயுள்ளதுடன் முறையான ஆய்வுகளின்றி அதிக விலைக்கு கதிரைகள் கொள்வனவு செய்யப்படுவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.

இந்த கோரிக்கையின் பிரகாரமே கதிரை கொள்வனவு செய்யும் நடவடிக்கையானத தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்காரா சுட்டிக்காட்டினார்.

எனினும் குறித்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.