(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிர்க்கட்சிக்கு உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்படாமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளனர். குறித்த சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாஸஸ்தலத்தில் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. மேலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் நடத்தவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணி குறித்தும் அதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.