(எம்.சி.நஜிமுதீன்)

தேர்தலை காலம் தாழ்த்த வேண்டிய தேவ‍ை சுயாதீன ஆணைக்குழுவுக்கு இல்லை. பாராளுமன்றம் தேர்தல் தொடர்பில் தனது பணியை நிறைவேற்றமையினாலேயே மாகாண சபைத் தேர்தல் தாமதடைகிறது என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளதாவது,

எமது நாட்டில் தற்போது மூன்று மாகாண சபைகளின பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. எனினும் தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் சட்டத்தில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இப்பிரச்சினையை பாராளுமன்றமே தீர்க்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

எனவே அது விடயத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு முன்வைக்க முடியாது. பாராளுமன்றம் தனது பணியை உரிய முறையில் மேற்கொண்டு பிரச்சினையைத் தீர்க்குமாயின் உடனடியாக தேர்தலை அறிவிப்பதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தயார் நிலையில் உள்ளது என்றார்.