தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்  வடமாகண முதல்வர் விக்கினேஸ்வரனை தொடர்ச்சியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சட்டத்தரணி கனக ஈஸ்வரன் என்பவரின் வீட்டில் இந்த சந்திப்புகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் அந்த கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இது குறித்து சம்பந்தனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விக்னேஸ்வரனை தொடர்ச்சியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளில் நீங்கள் ஈடுபடுவதாக அறிந்துள்ளோம், இது உண்மையா தொடர்ச்சியாக அவருடன் என்ன பேசி வருகின்றீர்கள் என அந்த உறுப்பினர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் இதற்கு சம்பந்தன் பதில் அளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.