வறக்காப்பொல பிரதேசத்தில் சகோதரர் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறி பொல்லால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று இரவு  குறித்த சம்பவம் இடம் பெற்றள்ளது. சகோதர் இருவருக்கிடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் அதிகரித்த நிலையில் சகோதரனால் உயிரிழந்த நபர் தாக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வறக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் குறித்த நபர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் தொலங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய றோகண குமார என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வறகாபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.