வவுனியா சாந்தசோலைப் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்று நேற்று இரவு இனந்தெரியாதவர்களினால் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9.30 மணியளவில் சாந்தசோலை கிறசர் வீதியிலுள்ள வியாபார நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றுள்ள உரிமையாளர் இன்று அதிகாலை 5 மணியளவில் வியாபார நிலையத்தினை திறப்பதற்குச் சென்றபோது வியாபார நிலையம் உடைத்து பெறுமதியான பொருட்கள் பால்மா, பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா குற்றப்பிரிவு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.