லோர்ட்சிஸ் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ள இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் இந்திய அணியை 107 ஓட்டங்களிற்குள் ஆட்டமிழக்கச்செய்துள்ளார்

மழைகாரணமாக முதல் நாள் போட்டி முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரண்;டாவது நாள் ஆட்டம் அவ்வப்போது மழை காரணமாக பாதிக்கப்பட்டது.

இதேவேளை நாணய சுழற்சியில்  வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி  இந்திய அணியை துடுப்பாட பணித்தது.

முற்றிலும் வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமான ஆடுகளத்தி;ல இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ளமுடியாமல் திணறிய இந்திய அணி 107 ஓட்டங்களிற்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணியின் சார்பில் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். அவர் ஐந்து விக்கெட்களை வீழ்த்துவது இது 26 முறையாகவும்

மேலும் அவர் லோர்ட்சிஸ் அதிக விக்கெட்களை வீழ்த்திய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பின்னர் கருத்து தெரிவித்துள்ள அன்டர்சன் இன்று நான் சிறப்பாக பந்து வீசாவிட்டால் நான் ஏமாற்றமடைந்திருப்பேன் என தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் இன்று பந்து வீசியது போன்று நாங்கள் பந்து வீசினால் எங்களால் எந்த அணியையும் இலகுவாக ஆட்டமிழக்க செய்திருக்க முடியும் என அவர் குறிப்பி;ட்டுள்ளார்.

நாங்கள் இன்று ஒருமோசமான பந்தை கூட வீசவில்லை அவர்கள் ஓட்டங்களை பெறுவதற்கு வாய்ப்பே வழங்கவில்லை  அவ்வாறான அழுத்தத்தை கொடுத்தால் எந்த அணிக்கும் துடுப்பெடுத்தாடுவது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் இவ்வாறு பந்து வீசியிருந்தாலும் நாங்கள் சிறப்பாக பந்து வீசியிருப்போம் எனவும் அன்டர்சன் தெரிசித்துள்ளார்.

நான் எனது வயது குறித்தோ வீழ்த்தவேண்டிய விக்கெட்கள் குறித்தோ சிந்திப்பதில்லை,எனக்கு வயதாகிவிட்டது போன்று நான் உணரவில்லை.ஏனையவர்கள் போன்று என்னாலும் மைதானத்தில் விழுந்து களத்தடுப்பில் ஈடுபடமுடியும் எனவும் ஆன்டர்சன் தெரிவித்துள்ளார். எதுவரை விளையாடமுடியுமோ அது வரை விளையாடப்போகின்றேன்,என்னால் விக்கெட்களை வீழ்த்த முடியும் அணிக்கு வெற்றியை தேடித்தரமுடியும் என நம்புகின்றேன் எனவும் அன்டர்சன் தெரிவித்துள்ளார்.