உள்ளூராட்சி சபை தேர்தல் மிகவிரைவில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்தார்.

தேர்தல்கள் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்படும். மேலும் விசேட தேவையுடையோருக்கு வாக்களிப்பதற்கு விசேட வசதி செய்யப்படும்.

வாக்குரிமை உள்ள அனைவரும் தமது வாக்குகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதோடு வாக்குரிமை தொடர்பில் நாட்டின் பல இடங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.