தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைகழக பொறியியல் பீடம் எதிர் வரும் 13 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பேராதனை பல்கலைகழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைகழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக குறித்த  பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 13 ஆம் திகதி பல்கலைகழகத்தின் பொறியியல் பீடம் திறக்கப்படவுள்ளதாக பல்கலைகழக உபவேந்தர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.