குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று மாலை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 02.08.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட கட)ற்தொழிலாளர்களின் போராட்ட நடவடிக்கையின் போது கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரச சொத்து துஸ்பிரயோகம் மற்றும் சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பபட்டு 

கைது செய்யப்பட்ட நிலையில் து.ரவிகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருகையில்.

இதன்படி கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக முல்லைத்தீவு பொலீஸார் இன்று காலை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிரனை அழைத்துள்ளார்கள்.

இதற்கமைய சிறுகுற்றத் தடுப்பு பிரிவு பொலீசாரால் வாய்முறைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது  கடற்தொழில்நீரியல் வளத்திணைக்கள பரிசோதகர் மோகன் அவர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடற்தொழிலாளர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களும் இணைந்து பணிக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளமை மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளமை தொடர்பில் முறையிடப்பட்டுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளமைக்கு அமைவாக து.ரவிகரன் அவர்கள் பொலீஸாருக்கு வாய்முறைப்பாட்டினை தெரிவித்து விட்டு பொலீஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வந்தபோது 

முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பிரிவு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி து.ரவிகரனை வீதியில் வைத்து மீண்டும் விசாரணைக்காக அழைத்துள்ளார்.

குற்றத்தடுப்பு பிரிவினர் சுமார் மூன்று மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டு து.ரவிகரன் அவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

இதன்படி முல்லைத்தீவு மாவட்ட நீதாவான் நீதிமன்ற பதில் நீதிபதி ரி.பரஞ்சோதி அவர்களின் வாசல்தலத்திற்கு கொண்டுசென்று முற்படுத்தியுள்ளனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ரி.பரஞ்சோதி அவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது அரச சொத்துக்கு சேதம் விளைவித்தவர்களை சரியான முறையில் அடையாளம் கண்டு முற்படுத்துமாறு பொலீஸாரை எச்சரித்துள்ளதுடன் வன்முறையினை தூண்டும் விதமான போராட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களுக்கு எச்சரிக்கை செய்து குறித்த வழக்கினை 21.ஆம் திகதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளார்.

இதன்பபோது து.ரவிகரன் சார்பாக சட்டத்தரணிகளான ஜஸ்வர் ஜமீல் மற்றும் அனித்த சிவனேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இரண்டு இலசட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலைசெய்துள்ளனர்.

கட்ந்த 02.08.18 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை தடைசெய்யுமாறு கோரியும் சுருக்குவலை அனுமதியினை இரத்து செய்யுமாறு கோரியும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் ஆயிரக்கணக்கானர்கள் திரண்டு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளை சந்திக வருமாறு மீனவர்கள் கோரி நீண்டநேரம் வீதியில் காத்திருந்த நிலையில் அதிகாரிகள் எவரும் சந்திக்காத நிலையில் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் இலஞ்சம் வாங்கும் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் எமது மாவட்டத்திற்கு வேண்டாம் என கோரி ஆத்திரமடைந்து சுற்றுவேலியனை உடைத்து சென்று திணைக்கள சொத்துக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

இந்த திணைக்களம் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கினை விசாரணை செய்து பதிவுகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலீஸார் முதற்கட்டமாக இன்று வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களை விசாரணைக்கு அழைத்து கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.