(கே.குமணன்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றுடன் ஒன்பதாவது நாளாக தொடர்ச்சியாக அப் பகுதி மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முனனெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் இன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் உப தவிசாளர் க.ஜனமேயெயந்த் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந்,

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் எமது பிரதேச இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருவதானது எமது எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

தற்போது இங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மீனவ சங்கத்தினரின் கோரிக்கையும் எமது கடள்வளத்தை பாதுகாக்குமாறும் சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடைசெய்யக்கோரியுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுடைய கோரிக்கையின் நியாயத்தன்மைகளை விளங்காது அவர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிடமுடியாது. நாளைமறுதினம் மத்திய அமைச்சர் தலைமையிலான பேச்சுக்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்டும் என்று எதிர்பாக்கின்றோம்.

அத்துடன் இவர்களின் உண்மையான போராட்டங்களுக்கு என்றும் துணை நிற்போம் என்றார்.