"அரசாங்கம் ரயில் சேவையை தனியார்மயப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது"

Published By: Digital Desk 7

10 Aug, 2018 | 05:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் ரயில் சேவையை  தனியார்மயப்படுத்துவதற்கு  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது பொது மக்களுக்கு பாரிய கஷ்டங்களைக் கொடுக்கும் வகையில் ரயில் தொழிற்சங்கத்தினரால் முன்னெடக்கப்பட்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம்  அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஆதரவு வழங்குவதாகவே காணப்படுகின்றது என்று ரயில் தொழிற்சங்க கட்டமைப்பினர் தெரிவித்தனர்.

  

ரயில் சேவை தொழிற்சங்கத்தினரால் கடந்த 3 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து  இன்று  மருதானை சனசமூக கேந்திர மத்திய நிலையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு உரையாற்றிய    கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் எஸ். பி. விதானகே 

4 தொழிற்சங்கத்தினர் தற்போது மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப்  போராட்டம் அரசாங்கத்திற்கு சாதகமாகவே காணப்படுகின்றது தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றுமாயின் ஏனைய தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரயில் ஊழியர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் மற்றும் வேதனம்  போன்ற  விடயங்கள்  பல வருடகாலமாக பேசப்பட்டு வருகின்றது,    ஆகவே இப்பிரச்சினை தொடர்பில் ஆராய ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில்  குழுவொன்றை நியமித்தார் . 

ரயில் தொழிற்சங்கத்தினர் கோரும் வேதனத்தை வழங்க வேண்டுமா? அல்லது முடியாதா? என்று ஆராய்ந்து அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிதே அக்குழுவின் நோக்கம் . ஆனால் அக்குழு  அவ்விடயத்தை மேற்கொள்ளாமல் ரயில் சேவையினை முற்றாக அழிக்கும்  பரிந்துரைகளையே அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளது.

இப்பரிந்துரையில் பிரதான விடயமாக ரயில் திணைக்களத்தை இலாபம் பெறும் தாபனமாக மாற்ற வேண்டும் என்று  குறிப்படப்பட்டுள்ளது. இதற்காக  அரசாங்கம் முழுமையாக  அரச ரயில் சேவையினை தனியாருக்கு வழங்க முயற்சிகளை  மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே 4 தொழிற்சங்கங்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

மக்களினை பெரும் அவஸ்த்தைக்கு உட்படுத்தியதாகவே இந்த  போராட்டம் முன்னெடுக்கப்ட்டது. இதற்கு அமைச்சர். ராஜித, அமைச்சர் சரத் அமுனுகம, மங்கள சமரவீர  ஆகியோர் பொருப்பு சொல்ல வேண்டும்.

அரசாங்கம் முறையற்ற விதத்தில் செயற்படுகின்றது மக்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையிலே காணப்படுகின்றனர். ரயில்  விவகாரத்திற்கு பொருப்பான  போக்குவரத்து அமைச்சர் இன்று அமைதி காப்பது  அவரது சிறந்த  நிர்வாகத்தினை  எடுத்துக் காட்டுகின்றது.

ஆகவே ரயில் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்காமல் அனைத்து தொழிற்சங்கத்தினரது போராட்டங்களுக்கும் தீர்வு காணும் விதத்தில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்." என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33