முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்தபோது தப்பியோடிய நான்கு கைதிகளுள் இருவரை கைதுசெய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் கடந்த 07 ஆம் திகதி விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் நீதி­மன்ற சிறைக்­கூ­டத்தில் அடைக்­கப்­பட்­டி­ருந்த வேளை நீதி­மன்ற சிறைச்­சாலை பொலி­ஸா­ருக்கு தெரியாத வகையில் தப்பியோடியுள்ளனர். 

இதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்ட தீவிடி தேடுதல் நடவடிக்கையின் போது முக்கிய கைதிகள் இருவரை தப்பியோடிய தினம் அன்றே  கைதுசெய்திருந்தனர்.

அத்துடன் தப்பியோடிய மேலும் இரு கைதிகளை கைதுசெய்ய முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த கந்தேவத்த உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி மயூரப்பெரேரா ஆகியோரின் உத்தரவிற்கு அமைய பதில் தலைமை பொலிஸ் பரிசோதகர் மற்றும் பெருங்குற்றப் பொறுப்பதிகாரி எச்.கே.கெங்காநாத் தலைமையிலான குழுவினரின் தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கைதிகள் இருவரையும் இன்றைய தினம் முல்லைத்தீவு, தண்ணீரூற்று பகுதியிலுள்ள வைத்து கைதுசெய்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை 14 நாட்க்கள் சிறையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.