யேமனில் சவுதிஅரேபிய கூட்டணியினர் மேற்கொண்ட விமானதாக்குதலில் சிறுவர்;கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சவுதி அரேபிய கூட்டணியின் விமானதாக்குதலில் 29 சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் உலகை உலுக்கியுள்ள நிலையிலேயே ஐநா செயலாளர் நாயகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

யேமனின் மாஜ் பிராந்தியத்தில் சிறுவர்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது இடம்பெற்ற விமானதாக்குதலில் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா பேச்சாளர் பர்ஹான் ஹக் உறுதிசெய்துள்ளார்.

குறிப்பிட்ட தாக்குதலை கண்டித்துள்ள ஐநா செயலாளர் நாயகம் சுயாதீன உடனடி விசாரணைகளை கோரியுள்ளார் என அவரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சட்டங்களின் கீழ் தமக்குள்ள கடப்பாடுகளை அனைத்து தரப்பும் கடைப்பிடிக்கவேண்டும் என ஐநா செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலில் 50 பேர் கொல்லபட்டுள்ளதுடன்  77 பேர் காயமடைந்துள்ளதாக கிளர்ச்சிக்காரர்களின்  மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை 29 உடல்கள் மருத்துமவமனைக்கு வந்துள்ளன இவற்றில் பல உடல்கள் சிறுவர்களுடையவை  எனஐசிஆர்சி தெரிவித்துள்ளது.

குரான் கற்பதற்காக சென்றுகொண்டிருந்த சிறுவர்களே கொல்லப்பட்டுள்ளனர் என கிளர்ச்சிக்காரர்களின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தொலைக்காட்சி இது தொடர்பில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளது.வீடியோக்களில் இறந்து நிலையில் பல சிறுவர்களை காணமுடிகின்றது.

மேலும் மூவரின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதையும் இரத்தம் வழிந்தோடுவதையும் அந்த வீடியோக்களில் காணமுடிகின்றது.