மத்திய மாகாண கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்தி திட்டங்களுக்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் 95 மில்லியன் ரூபா நன்கொடையின் மூலம் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, கண்டி இந்திய உதவித்தூதுவர் திரேந்திர சிங், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மத்திய மாகாண கல்வி அமைச்சர் ரமேஸ்வரன், மத்திய மாகாண சபைத்தலைவர் மதியுகராஜா, வலய கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.