SLIIT இன் இரண்டாம் ஆண்டு பொறியியல் பிரிவின் மாணவியான ருவினி கன்னங்கர, அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய போட்டிகளின் போது டேபிள் டெனிஸ் விளையாட்டில் மூன்று பதக்கங்களை சுவீகரித்திருந்தார். 

மலேசியாவில் நடைபெறும் Perfect 2016 World team டேபிள் டெனிஸ் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் ருவினி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரின் சிறப்பான செயற்பாடுகள் தொடர்பில் SLIIT இன் தலைமை அதிகாரியும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே கருத்து தெரிவிக்கையில், 

“ருவினியின் இந்த சாதனைகள் தொடர்பில் நாம் பெருமளவு மகிழ்ச்சியடைகிறோம். SLIIT க்கு மட்டுமன்றி எமது நாட்டுக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார். 

அவருக்கு தொடர்ந்து நாம் ஊக்குவிப்புகளையும் உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளோம், வகுப்பறையில் மட்டுமன்றி வகுப்பறையின் வெளியிலும் சிறப்பாக செயலாற்றுவோருக்கு நாம் தொடர்ந்து ஊக்குவிப்புகளை வழங்குவோம்” என்றார்.

“விளையாட்டுக்களில் பங்கேற்பது, கழகங்கள் மற்றும் சங்கங்களில் அங்கத்துவம் வகிப்பது என்பது மாணவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளாக அமைந்துள்ளது என்பதில் SLIIT ஐச் சேர்ந்த நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இவற்றின் மூலம் சிறந்த ஞாபகங்களை உருவாக்குவது போன்றவற்றை வழங்குகிறது” என்றார்.

ருவினி கன்னங்கர தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “எனது கற்கைகளையும் விளையாட்டு வாழ்க்கையையும் சமாளித்து பணியாற்றக்கூடிய இயலுமையை SLIIT எனக்கு வழங்கியுள்ளது. 

என்ஜினியரிங் பட்டப்படிப்பில் பெருமளவு கற்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும், எனது கற்கைகளையும் விளையாட்டையும் சமாளித்துக் கொள்ள எனக்கு பக்கபலமாக அமைந்துள்ள விரிவுரையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.