(எம் .எம். மின்ஹாஜ், ஆர்.யசி)

பிரதான எதிரக்கட்சி தலைவர் பதவி பொது எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் என்றால் முதலில் அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீனமாகுங்கள். அதன் பின்னர் சபாநாயகரின் முடிவு குறித்து ஆராய முடியும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

எதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே வழங்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் இன்று காலை அறிவித்ததையடுத்து, பொது எதிரணியினர் சபையில் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து சபை முதல்வர் லக்ஷ் கிரியெல்ல, சபாநாயகரின் முடிவு மீது எவரும் விவாதம் நடத்த முடியாது. இவர்கள் பாராளுமன்ற விதிமுறைகளை மீறுகின்றனர். இவர்களுக்கு எதிர்க்கட்சி பதவி வேண்டும் என்றால் முதலில் அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீனமாக எதிரணியில் அமர வேண்டும். அவ்வாறு நீங்கள் சுயாதீனமாக அமருங்கள் அதன் பின்னர் உங்களுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்குவது குறித்து விவாதிக்கலாம் என்றார்.