(ஆர்.விதுஷா றோஜனா)

கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்திய நபர் ஒருவர் நேற்று பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த தொலைபேசி மூல தகவலை அடுத்து பொலிஸாரால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடம் இருந்து 10கிராம்  ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   

குறித்த நபர் முகத்துவார பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.