இங்கிந்து, தென்னாபிரிக்கா அணிகளுக்கான இரண்டாவது டெஸட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டித் தொடரானது நேற்றைய தினம் லண்டனிலுள்ள லோர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமாகவிருந்தது.

எனினும்  நாணய சுழற்சிக்கு முன்னரே மழை பெய்ய ஆரம்பித்ததன் காரணமாக மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதன் பின்னரும் மழைத் தூறலானது விட்டு விட்டு தூவிக் கொண்டிருந்ததன் காரணமாக போட்டியில் ஒரு பந்து கூட விசப்படாது இரண்டவாது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 

இந் நிலையில் இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆகும். எனினும் லண்டனில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.