சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இன்று காலை எட்டு அலுவலக புகையிரதங்கள் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையம் நோக்கி பயணிக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.