(எம்.எம்.மின்ஹாஜ்,ஆர்.யசி)

ஒன்பது சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. 

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. 

இதன்போது ஒன்பது சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரேரணை ,சேர் பெறுமதி வரி திருத்த சட்டமூலம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.

அத்துடன் விவாதம் நடத்தி நிறைவேற்றாத குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் பெறுமதி வரி திருத்த சட்டமூலம் காலை பொழுதில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.