யேமனில் அமெரிக்க ஆதரவு சவுதி அரேபிய கூட்டணியினர் மேற்கொண்ட விமானதாக்குதல்கள் காரணமாக பல சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

யேமனில் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த பஸ்மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை குழு இதனை உறுதிசெய்துள்ளது.மருத்துவமனைக்கு பல உடல்களும் காயம்மடைந்தவர்களும் வந்துள்ளனர் என செஞ்சிலுவை குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழ் சிறுவர்களை பாதுகாப்பது அவசியம் என ஐசிஆர்சி தெரிவித்துள்ளது.

பலர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் இவர்களில் பலர் பத்துவயதிற்கு உட்பட்டவர்கள் என ஐசிஆர்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட பகுதியில் உள்ள கிளர்ச்சிக்காரர்கள் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 60 பேர் காயமடைந்துள்ளனர் அனேகமானவர்கள் குழந்தைகள் என தெரிவித்துள்ளனர்.

குரான் கற்பதற்காக சென்றுகொண்டிருந்த சிறுவர்களே கொல்லப்பட்டுள்ளனர் என கிளர்ச்சிக்காரர்களின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தொலைக்காட்சி இது தொடர்பில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளது.வீடியோக்களில் இறந்து நிலையில் பல சிறுவர்களை காணமுடிகின்றது.

மேலும் மூவரின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதையும் இரத்தம் வழிந்தோடுவதையும் அந்த வீடியோக்களில் காணமுடிகின்றது.