உயர் தர பரீட்சைக்கு சென்ற மாணவிகள் விபத்தில் சிக்கி படுகாயம் 

Published By: Daya

09 Aug, 2018 | 04:36 PM
image

கொத்மலை - ஹரங்கல கிரிமிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு சென்ற மூன்று மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கெட்டபுலா ஹரங்கல பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில்  இன்று  காலை  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெட்டபுலா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள் பரீட்சை எழுதுவதற்காக ஹரங்கல பகுதியில் அமைந்துள்ள பரீட்சை மத்திய நிலையத்திற்கு முச்சக்கரவண்டியில் செல்லும் பொழுது கிரிமிட்டி பகுதியில் மேற்படி முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த மூன்று மாணவிகளும் பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சை எழுதிய பின்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், ஏனைய இரு மாணவிகளும் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04