(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

மாகாண சபைத் தேர்தலை எந்த முறையிலாவது உடன் நடத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகேள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் நிறுவப்பட்ட ஒன்பது சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான சம்பளத்தையும் கொடுப்னவையும் அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து பிரதமர் உரையாற்றுகையில், அதன் போது குறுக்கிட்டே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

மாகாண சபை தேர்தல் முறைமை சட்டத்தை எதிரணியினர் நிறைவேற்றினால் தந்தால் உடன் தேர்தல் நடத்துவதில் சிக்கல் இல்லை என்றார்.

சுயாதீன ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கு அமைய பதவி உயர்வுகளை வழங்கவேண்டும். இல்லையேல்  சுயாதீன ஆணைக்குழுக்களில் எந்தவொரு பிரயோசனமில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சபையில் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.