சிறு பிள்ளை போல் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் - வாக்குவாதத்தின் போது குறுக்கிட்ட சபாநாயகர்

Published By: Vishnu

09 Aug, 2018 | 04:00 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

முன்னாள் வீடமைப்புத்துறை விமல் வீரவன்சவுக்கும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துதறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விமல் வீரவன்ச நிர்மாணித்த வீடுகளில் பல அவரது உறவினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியதையடுத்து விமல் வீரவன்ச எம்.பி.க்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் பாராளுமன்ற மந்திரி பதவியில் இருந்து நீங்குவேன் என விமல் வீரவன்ச எம்.பி. தெரிவிக்கையில், எனது குற்றச்சாட்டு பொய் என்றால் அமைச்சுப் பதவியை துறப்பேன் என சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய, நிகழ்கால அமைச்சரும் முன்னாள் அமைச்சரும் சிறு பிள்ளைகள் போன்று சண்டை போட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களின் தனிப்பட்ட காரணிகளை கூறும் இடம் இதுவல்ல. இன்றைய தினம் மிகவும் முக்கியமான சட்டமூலங்கள் விவாதத்திற்கு எடுக்கவேண்டியுள்ளது. ஆகவே காலத்தை வீணடிக்க வேண்டாம் என கூறினார். 

எனினும் இதன் பின்னரும் விமல் வீரவன்சவும் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21