கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்கும் சட்டத்தை நிராகரித்தது ஆர்ஜென்டீனா

Published By: Rajeeban

09 Aug, 2018 | 03:44 PM
image

கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்குவதற்கான சட்டமூலத்தை ஆர்ஜென்டீனா நிராகரித்துள்ளது.

ஆர்ஜென்டீனாவின் செனட் 38-31 என்ற அடிப்படையில் இந்த சட்டமூலத்தை நிராகரித்துள்ளது.

கர்ப்பம் தெரிவித்தவர்கள் முதல் 14 வார காலத்திற்குள்  கருக்கலைப்பு செய்வதற்கு வழிவகுக்கும் சட்டமூலத்தையே  ஆர்ஜென்டீனாவின் செனெட் நிராகரித்துள்ளது.

தற்போதைய சட்டத்தின் படி பாலியல்வன்முறை மற்றும் தாயின் உடலிற்கு ஆபத்து ஏற்படும் தருணங்களிலேயே கருக்கலைப்பில் ஈடுபடமுடியும்.

இதேவேளை  இந்த சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டதை பெண்கள் உடல்நலம் மற்றும் அவர்களின் உரிமைக்கு ஏற்பட்ட பின்னடைவு என பெண் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

செனெட் வாக்களித்த விதமும் இந்த சட்டமூலம் குறித்து விவாதம் இடம்பெற்ற விதமும் கவலையளிக்கின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட சட்டத்தினை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை தொடர்ந்தும் கொடுக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பில் ஆர்ஜென்டீனாவில் பலத்த  ஆர்வம் காணப்பட்டதுடன் கடும் விவாதங்களும் இடம்பெற்றிருந்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21