புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு  காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற் கொண்டு இராணுவத்தினரின் பஸ்களை சேவையில் ஈடுபட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு நடவக்கையின் காரணமாக இதுவரையில் புகையிரத சேவைகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என புகையிரத கட்டுப்பாட்டு நிலயைம் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற் கொண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கிணங்க இலங்கை போக்குவரத்து சபையினர் உயர் தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களுக்கு இலவச பஸ் சேவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரிகேடிய சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

எவ்வாறாயினினும் தமது போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வோம் என புகையிர  ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளது.