பாகிஸ்தானின் பிரபல பாடகியும், சின்னத்திரை நடிகையுமான ரேஷ்மா கணவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ரேஷ்மா கணவருக்கு 4ஆவது மனைவியாவார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் அவரை பிரிந்து தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார்.

இந் நிலையில் நேற்று ரேஷ்மாவின் வீட்டிற்கு சென்ற அவரது கணவர் ரேஷமாவுடன் நீண்ட நேரம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றவே ரேஷ்மாவின் கணவர் ரேஷ்மாவை சரமாறியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ரேஷ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ரேஷ்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சந்தேக நபரான ரேஷ்மாவின் கணவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இது பாகிஸ்தானின் கைபர் பக்துங்குவாவில் பெண் கலைஞர்களுக்கு எதிராக இவ் வருடத்தில் நடைபெறும் 15ஆவது சம்பவம் ஆகும்.