நீரிழிவு நோயும் இரண்டு வாரமும்

Published By: Daya

09 Aug, 2018 | 12:18 PM
image

நீரிழிவு நோயாளிகள் பற்றிய அண்மைய ஆய்வு ஒன்றில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் ஏதோ சில காரணங்களால் இரண்டு வார காலத்திற்கு தங்களின் நாளாந்த நடைபயிற்சியையோ அல்லது நாளாந்த உடற்பயிற்சியையோ விட்டுவிட்டால் மீண்டும் அவர்களுக்கு நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துவிடுகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

 டைப்=2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அல்லது டைப் =2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று எச்சரிக்கையாகள இருப்பவர்கள் என அனைவரும் ஒருபோதும் நடைபயிற்சியையோ அல்லது உடற்பயிற்சியையோ விட்டுவிடாதீர்கள்.

அப்படிவிட்டுவிட்டால் உங்களுடைய உடல் திறன் குறைந்து, இன்சுலீன் சுரப்பில் மீண்டும் சமச்சீரற்ற தன்மை உண்டாகிவிடும். இதன் காரணமாக இன்சுலீன் சுரப்பில் பற்றாக்குறை ஏற்பட்டு நீரிழிவு நோயின் பாதிப்பு உண்டாகும்.

இன்றைய இளைய சமுதாயத்தினர் நீரிழிவு நோயைப் பற்றி போதிய விழிப்புணர்வைப் பெற்றிருந்தாலும் அதற்குரிய முக்கியத்துவத்தை அளிக்க மறுக்கிறார்கள். இதனால் இவர்கள் நாற்பது வயதிலேயே நீரிழிவு நோயின் பாதிப்பிற்கு ஆளாகி, ஆயுள் முழுவதும் அதனை கட்டுப்படுத்துவதிலேயே செலவிடுகிறார்கள்.

தினமும் காலையில் ஆறு மணிக்குள்ளாக முப்பது நிமிட நடைபயிற்சி சிறந்தது. குறைந்தபட்சம் ஏழு மணிக்குள்ளாகவது அரை மணி நேர நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள். மது அருந்தினால் இரத்த அழுத்தமும், உடல் எடையும் அதிகரிக்கும்.

இதன் காரணமாகவே இன்சுலீன் சுரப்பு மற்றும் செயற்பாட்டில் மாற்றம் ஏற்படும். அதனால் மது அருந்துவதை முற்றாக தவிர்க்கவேண்டும். ஆரோக்கியமான உணவு முறையை உங்கள் வைத்தியர்களிடம் ஆலோசனைப் பெற்று அதனை உறுதியாக பின்பற்றுங்கள்.

ஏனெனில் உலகளவில் ஆசிய நாடுகளில் தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறதாம்.

அதனால் ஆரோக்கியமான உணவுமுறையை தெரிவு செய்யுங்கள். அதில் தொடர்ச்சியாகவும், உறுதியாகவும் பயணப்படுங்கள். நீரிழிவு நோயிலிருந்து தற்காத்து கொள்ளுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29