திருமலைக்குள் பிரசன்னமாவதற்கு சீனா போன்ற   பகீரதப் பிரயத்தனம் 

Published By: MD.Lucias

03 Mar, 2016 | 09:02 AM
image

சம்பூர் நிலப்­ப­ரப்பை தம்­வ­ச­மாக்க சீனா போன்ற நாடுகள் பகீ­ரதப்பிர­யத்­த­னங்­களை இன்னும் மேற்­கொண்டு வரு­கின்­றன. இந்நிலையில், இப்பகுதியில்அனல் மின் நிலை­ய­மொன்று நிறு­வப்­ப­டு­வதால் ஏற்­படும் பாதிப்­புக்­களை நான் உண­ருவேன்.

இருப்­பினும் உரி­ய­த­ரப்­பி­ன­ருடன் கலந்து பேசி நல்­ல­தொரு முடிவைப் பெற முயற்­சிப்போம் என்று எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையும், தனியார் நிறு­வ­னமும் இணைந்து 10 கோடி ரூபா பெறு­ம­தி­யான ஆடைத்­தொ­ழிற்­சா­லை­யொன்றை மூதூர் சீத­ன­வெளிப் பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்கும் முக­மாக நேற்­றைய தினம் அடிக்கல் நாட்டு விழா நடை­பெற்­றது. அடிக்கல் நாட்­டிய பின் சம்­பூரில் நிறு­வப்­ப­ட­வுள்ள அனல் மின்­நி­லை­யத்­துக்கு எதிர்ப்புத் தெரி­வித்து பசுமை திரு­கோ­ண­மலை அமைப்­பினால் ஏற்­பாடு செய்­தி­ருந்த எதிர்ப்பு அணி­யி­னரைச் சந்­தித்து உரை­யா­டிய போதே சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்,

முன்­னைய அரசு சம்பூர் பிர­தே­சத்தை முழு­மை­யாக கப­ளீ­கரம் செய்­தி­ருந்­தது, சம்­பூரை விடு­விப்போம் என வாக்­கு­றுதி நல்­கியும் அவர்கள் விடு­விக்­க­வில்லை. புதிய ஆட்சி மாற்­றத்தின் கார­ண­மாக அண்­மையில் சம்பூர் மக்­க­ளுக்கு சொந்­த­மான 818, ஏக்கர் காணி எவ்­வித நிபந்­த­னை­யு­மின்றி விடு­விக்­கப்­பட்­டது. இம்­மாத முடி­வுக்குள் சம்­பூரில் உள்ள கடற்­படை முகாம் அமைந்­தி­ருக்கும் 237 ஏக்கர் காணியும் விடு­விப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இது நல்­ல­தொரு நட­வ­டிக்­கை­யென்­பதை எல்­லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சீனா போன்ற நாடுகள் இப்­ப­கு­தியில் பிர­சன்­ன­மா­வ­தற்கு பகீ­ரதப் பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. அரசு உடன்­பட்டால் அவர்கள் மறு­நாளே உள்­நு­ழைந்து விடு­வார்கள். அனல் நிலை­ய­மொன்று அமைக்­கப்­ப­டு­வ­தனால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புக்­க­ளையும் விளை­வு­க­ளையும் நான் அறிவேன். மக்­க­ளா­கிய உங்கள் கோரிக்­கையை தார்­மீ­க­மாக நான் ஏற்றுக் கொள்­கிறேன். இருப்­பினும் இது­வி­டயம் தொடர்பில் உரிய தரப்­பி­ன­ருடன் கலந்து பேசி நல்­ல­தொரு முடிவை நோக்கி நக­ருவோம் என்றார்.

இதேவேளை ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்­கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு சம்­பந்தன் உரை­யாற்றுகையில்

திரு­கோ­ண­ம­லையில் பாரிய அபி­வி­ருத்­தி­யொன்றை மேற்­கொள்ள அர­சாங்கம் தீவிர முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. திரு­கோ­ண­மலை கடல்­முகம் அதைச் சுற்­றி­யுள்ள பகு­திகள் நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட விருப்­ப­துடன் பாரிய அபி­வி­ருத்­தி­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இந்த நக­ரத்தின் அபி­வி­ருத்தி தொடர்பில் சிங்­கப்­பூரில் உள்ள தனியார் நிறு­வ­ன­மொன்று பாரிய திட்­டங்­களைத் தயா­ரித்து வரு­கின்­றது. எதிர் காலத்தில் திரு­கோ­ண­மலை நக­ரத்தில் அபி­வி­ருத்­தி­யா­னது சமூக, பொரு­ளா­தார மற்றும் வேலை வாய்ப்புத் துறையில் பாரிய மாற்­றங்­களைக் கொண்டு வர­வுள்­ளது எனத் தெரி­யப்­ப­டுத்­து­கிறேன்.

இதே போன்றே திரு­கோ­ண­மலைப் பிராந்­தி­யத்தில் முத­லீட்டு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­காக ஜப்பான் நாடு முத­லீட்­டாளர் மா­நா­டொன்றை விரைவில் நடாத்­தவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அர­சாங்­க­மா­னது சர்­வ­தே­சத்­துக்கு வழங்­கிய உத்­த­ர­வா­தங்­களை நிறை­வேற்ற வேண்டும். வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அவர்கள் ஐ.நா. சபை உட்­பட சர்­வ­தே­சத்­துக்கு உறு­தி­யான வாக்­கு­று­தி­களை நல்­கி­யி­ருந்தார். அமெ­ரிக்­காவால் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றுவோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைக் கொண்டு வருவோமென்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாட்டில் நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்பட வேண்டுமாயின் அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும்.

அந்த அரசியல் தீர்வின் மூலம் வடகிழக்கு மக்கள் சுபீட்சமான வாழ்வைப் பெற வேண்டுமாயின் அரசியல் தீர்வு அவசியமானது என்பதை இந்த அரசுக்கும் சர்வதேசத்துக்கும் நாம் உணரவைத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38