அமெ­ரிக்­காவால் எண்ணெய் ஏற்­று­ம­தி­யை தடுக்க முடியாது - ஈரான்

Published By: Vishnu

09 Aug, 2018 | 10:37 AM
image

ஈரா­னிய எண்ணெய் ஏற்­று­ம­தி­களை பூஜ்­ஜி­ய­மாக்­கு­வ­தற்­கான அமெ­ரிக்­காவின் திட்டம் வெற்றி பெற­மாட்­டாது எனவும் ஈரா­னிய எண்ணெய் ஏற்­று­ம­தி­களை  தடுத்து நிறுத்­து­வ­தற்கு அமெ­ரிக்­காவால் முடி­யாது எனவும் ஈரா­னிய வெளி­நாட்டு அமைச்சர் ஜாவத் ஸரீப்  நேற்று  புதன்­கி­ழமை எச்­ச­ரிக்கை  விடுத்­துள்ளார்.

ஈரா­னுடன் வர்த்­தகம் மேற்­கொள்­வ­தற்கு எதி­ராக  அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட்  ட்ரம்ப் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள நிலையில் உலகம் அமெ­ரிக்க ஒரு­பக்கச் சார்பால் களைப்­ப­டைந்­துள்­ள­தாக  அவர் கூறினார்.

அவர் நேற்று  முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை  வடகொரிய வெளி­நாட்டு அமைச் சர் றி யொங் ஹோவை  சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 இதன்­போது  அமெ­ரிக்­காவால் மீள விதிக்­கப்­பட்­டுள்ள  பொரு­ளா­தார தடைகள் குறித்து அவர் கடும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தினார்.

 ஈரா­னுக்கு எதி­ராக விதிக்­கப்­பட்­டுள்ள தடைகள்  என்­று­மில்­லாத வகை­யி­லான  மோச­மான தடைகள் என  டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து செவ்­வாய்க்­கி­ழமை பின்­னி­ரவு ஜாவத்  ஸரீப் சமூக இணை­யத்­த­ளத்தில் விடுத்த  செய்­தியில், "உலகம் டொனால்ட் ட்ரம்பின் பக்­கச்­சார்பால்  களைப்­ப­டைந்து விட்­டது. அதனால்  உலகம்  உணர்ச்­சி­வ­சப்­பட்ட (ட்ரம்பின்) டுவிட்டர் உத்­த­ர­வு­களைப்  பின்­பற்­றப்­போ­வ­தில்லை"  எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

ஐரோப்­பிய ஒன்­றியம்,  ரஷ்யா,  சீனா மற்றும்  ஏனைய  தமது  வர்த்­தகப் பங்­கா­ளி­க­ளிடம் இது தொடர்பில்   கேட்­ட­றிந்து கொண்­ட­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

தற்­போது அமெ­ரிக்­காவால்  ஈரா­னுக்கு எதி­ராக விதிக்­கப்­பட்­டுள்ள தடைகள் இதற்கு முன்னர்  விதிக்­கப்­பட்ட தடைக­ளுடன் ஒப்­பி­டு­கையில் அந்­நாட்டை மிகவும் குறைந்த அள­வி­லேயே பாதிப்­ப­ன­வாக உள்­ளன என  சர்­வ­தேச நெருக்­கடி குழுவில் ஈரா­னிய திட்ட பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்றும் அலி வாயஸ் தெரி­வித்தார்.

டொனால்ட் ட்ரம்ப்  காலப்­போக்கில் தனது திட்டம் தொடர்பில்   ஏனைய உலக நாடு­க­ளி­ட­மி­ருந்து இணக்­கப்­பாட்டை பெற  எதிர்­பார்த்­துள்ள நிலையில்  சீனா மற்றும் ரஷ்யா உள்­ள­டங்­க­லான  பல நாடுகள் அதற்கு இணங்­கா­துள்­ள­தாக  அவர் மேலும்  கூறினார்.

அதன் கார­ண­மாக அமெ­ரிக்­காவால்  புதி­தாக விதிக்­கப்­படும் தடைகள்  முன்னர்  ஈரா­னுக்கு எதி­ராக விதிக்­கப்­பட்ட தடைகள் போன்று பய­னு­று­திப்­பாடு மிக்­க­வை­யாக அமை­யாது என அவர் தெரி­வித்தார்.

அமெ­ரிக்கா ஈரா­னுக்கு எதி­ராக தடை­களை விதித்­துள்ள நிலையில் ஐரோப்­பிய ஒன்­றிய வெளி­நாட்டுக் கொள்கைத் தலைவர்  பெடெ­றிக்கா  மொகெ­ரினி, ஈரா­னுடன் மேலும் வர்த்­த­கங்­களை மேற்­கொள்ளப் பிராந்­திய கம்­ப­னி­களை ஊக்­கு­வித்­துள்ளார்.  ஈரான்  தனது அணு­சக்தி நிகழ்ச்சித் திட்­டத்தை வரை­யறை செய்­வது என்­பது தொடர்பில்  உறு­திப்­பாட்­டுடன் உள்­ள­தாக  அவர் கூறினார்.

"நாங்கள்  ஈரானை தொடர்ந்து அந்த உடன்­ப­டிக்­கையைப் பேண வைப்­ப­தற்கு எம்மால் முடிந்­ததை செய்­ய­வுள்ளோம்.  அதன் பிர­காரம் ஈரா­னிய மக்­க­ளுக்கு பொரு ­ளா­தார அனு­கூ­லங்­களை தொடர்ந்து வழங்­க­வுள்ளோம். அந்த உடன்­ப­டிக்கை எமது பிராந்­தி­யத்­துக்கு மட்­டு­மல்­லாது  உலகின்  பாது­காப்பு அக்­க­றை­க­ளுக்கு அமை­வா­னது என நாம் நம்­பு­கிறோம்"  என பெடெ­றிக்கா  மொகெ­ரினி  நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை நியூ­ஸி­லாந்தின் வெலிங்டன் நக­ருக்­கான தனது பய­ணத்தின் போது ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கையில் கூறினார்.

அமெ­ரிக்கா  ஈரான் மீது  திரும்­பவும் தடை­களை விதித்­துள்­ளமை குறித்து தாம் மிகவும் ஏமாற்றம் அடைந்­துள்­ள­தாக  ரஷ்ய வெளி­நாட்டு அமைச்சால் வெளி­யி­டப்­பட்­டுள்ள  அறிக்­கையில்  குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதே­ச­மயம் சீனாவும் அமெ­ரிக்கத் தடை­க­ளுக்கு  பகி­ரங்க எதிர்ப்பைத் தெரி­வித்­துள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10