யாழ்ப்பாணக் குடாநாட்டின் தற்போதைய சிவில் நிலைமை தொடர்பில் ஆளுநர் இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் ஓர் சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை , வழிப்பறி , வாள் வெட்டுக்கள் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பில் பொலிஸ் உயர் அதிகாரி சர்வ மதத் தலைவர்கள் மூத்த ஆர்வலர்கள் கல்வியாளர்கள் எனப் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மை நாட்களாக மீண்டும் அதிகரிக்கும் வன்முறை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து வரும் நிலையில் மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.