வெலிசற பகுதியில் லொறியொன்று மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதன் காரணமாக வத்தளை - நீர்கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து நீர்கொழும்பு செல்லும் வீதியின் வத்தளை, மாபொல, மாபாகே மற்றும் வெலிசற ஆகிய பகுதிகளிலே கடும் வாகன நெரிசல் நிலவுவதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், வாகன சாரிதிகள் பயணித்துக்காக வேறு மாற்றுவழியை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வாகன நெரிசலானது சுமார்  ஒன்றரை மணி நேரத்துக்கும் நீடித்து வருவதுடன் வாகன நெரிசலை சுமூகமான நிலைமைக்கு கொண்டு வர போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.