(எஸ்.ஜே.பிரசாத்)

இலங்­கையில் தற்­போது பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள விளை­யாட்டுச் சங்­கங்­களில் நடை­பெறும் தேர்­தல்­களை நடத்த ஓய்­வு­பெற்ற நீதி­ப­திகள் அடங்­கிய தேர்தல் கமிட்­டியை உரு­வாக்­கப்­ போ­வ­தாக விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார்.

விளை­யாட்டுச் சங்­கங்­களிலுள்ள மிகப்­பெ­ரிய சவால்­களில் ஒன்­றுதான் அச் சங்­கங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­தி­மு­டிப்பதென்­பது. உதா­ர­ணத்­துக்கு தற்­போது கிரிக்கெட் நிறு­வ­னத்­துக்­கான தேர்தல் கடந்த இரண்டு, மூன்று மாதங்­க­ளாக இழு­ப­றி­யி­லேயே இருக்­கி­ன்றது.

இந்­நி­லையில் தேர்தல் நடத்­து­வது தொடர்­பான சட்­டத்தை மாற்றி புதி­ய­தொரு சட்­டத்தை உரு­வாக்க விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­தபா முடி­வெ­டுத்­துள்ளார்.

அதன்­படி இது­ கு­றித்து ஆராய அனைத்து விளை­யாட்டு சங்­கங்­க­ளுக்கும் அழைப்­பு­ வி­டுத்தார்.

அதன்­படி இக் கூட்டம் நேற்­று­ முன்­தினம் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு பேசும்­போதே அமைச்சர் மேற்­கண்ட நீதி­ப­திகள் அடங்­கிய தேர்தல் கமிட்­டியை உரு­வாக்­கப்­ போ­வ­தாக அறி­வித்தார்.

அமைச்­சரின் இந்தக் கருத்துக்கு பலரும் ஆத­ரவு தெரி­வித்­தாலும் ஒரு­சிலர் இக் கருத்­துக்கு மாற்­றுக்­ க­ருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

இறு­தியில் அமைச்சர் சுயா­தீ­ன­மான முறையில் தேர்தலை நடத்தி விளையாட்டுச் சங்கங்களில் ஜனநாயக ரீதியாக அதிகாரிகள் நியமிக்கப்படுவதையே நான் விரும்புகின்றேன் என்றார்.

அத்தோடு நான் தேர்தலை பிற்போடும் அமைச்சர் என்ற பெயரும் எனக்குண்டு என்று சொல்லிச் சிரித்தார் அமைச்சர் பைஸர் முஸ்தபா.