தமிழகத்தின் இராமநாதபுரம் பகுதியிலிருந்து தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோகிராம் கேளரள கஞ்சாவை  சுங்கத்துறையினர் கைப்பற்றியதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவானது இந்திய ரூபாவில் ஐந்து லட்சம் பெறுமதியானவையாகும்.

கஞ்சாவை தூத்துக்குடி வாயிழாக கடத்த முயன்ற போது ராமநாதபுரத்திலிருந்து சந்தேக நபர்களை பின் தொடர்ந்த சுங்கப் பிரிவினர் குளத்தூர் சுங்க நிலையத்துக்கு அருகே தூத்துக்குடி சுங்கத்துறையினரின் உதவியுடன் இவர்களை கஞ்சாவுடன் கைதுசெய்ததுடன் அவர்கள் பயணித்த வாகனத்தையும் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.